1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Husband give wife the plot document of moon

காதல் மனைவிக்கு நிலாவில் பிளாட் வாங்கி கொடுத்த கணவர்: ஒரு ஆச்சரிய தகவல்

நிலா
காதல் மனைவிக்கு நிலாவில் பிளாட் வாங்கி கொடுத்த கணவர்
காதல் மனைவிக்கு நிலாவில் இடம் வாங்கி கொடுத்த கணவர் ஒருவர் குறித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
திருமண நாளன்று மனைவிக்கு கணவர்கள் பரிசுகள் வாங்கிக் கொடுப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவர் தனது மனைவிக்கு நிலாவில் இடம் வாங்கி கொடுத்துள்ளார் 
 
இவர் பிரேசில் நாட்டில் தற்போது வாழ்ந்து வருகிறார். அவர் தனது மனைவி சப்னாவுக்கு திருமண நாளன்று வித்தியாசமாக ஏதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இதனை அடுத்து திருமண நாளன்று கேக் வெட்டியதும் மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக நிலாவில் இடம் வாங்கிய பத்திரத்தை அளித்தார் அதை பார்த்ததும் அவரது மனைவி சாப்பிடலாம் மிகுந்த ஆச்சரியம் அடைந்தார் 
 
நிலவில் இடம் வாங்கியதற்கான பத்திரத்தின் சான்றிதழை நியூயார்க்கில் உள்ள அவருக்கு லூனர் சொசைட்டி என்ற நிறுவனத்தில் அவர் மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எவ்வளவு தொகை இந்த நிலத்தை வாங்கினார் என்பதை தர்மேந்திரா செய்தியாளர்களிடம் தெரிவிக்க மறுத்துவிட்டார். இருப்பினும் இந்த விலை உயர்ந்த பரிசு தனது மனைவிக்கு பொருத்தமான ஒன்றுதான் என்று அவர் தெரிவித்துள்ளார்
 
அடுத்த கட்டுரையில்
பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்த விவசாயிகள்: முடிவுக்கு வருமா போராட்டம்?