1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 10 அக்டோபர் 2023 (07:05 IST)

விற்பனையாகாத லாட்டரி சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசு.. லாட்டரி கடைக்காரருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

Lottery
கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை கடந்த பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் விற்பனையாகாத சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதால், லாட்டரி கடைக்காரருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. 
 
கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கோடி ரூபாய் முதல் பரிசு உள்ள லாட்டரி சீட்டுகள் விற்பனை ஆகின. இதில் கோழிக்கோடு பகுதியில் லாட்டரி சீட்டு கடைக்காரர் கங்காதரன் என்பவரிடம் இருந்த விற்பனை ஆகாத லாட்டரி சீட்டுக்கு ரூபாய் ஒரு கோடி பரிசு கிடைத்துள்ளது. இதனால் அந்த லாட்டரி சீட்டு கடைக்காரர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். 
 
 தினமும் லாட்டரி சீட்டு விற்பனை மூலம் மிகவும் குறைவான வருமானமே கிடைத்து வந்த நிலையில் தற்போது திடீரென அவருக்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்துள்ளது அவர்களுக்கு அவருக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது. 
 
இந்த பணத்தை வைத்து தனது குடும்பத்தை மேம்படுத்துவேன் என்றும் குழந்தைகளை நன்றாக படிக்க வைப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விற்பனை ஆகாத லாட்டரி சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva