1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (09:15 IST)

வெறித்தனமாய் துரத்தி வந்த நாய்கள்; நூல் இழையில் தப்பித்த சிறுவர்கள்!

Dogs Bite
சமீப காலமாக நாய்கள் கடிப்பதால் மக்கள் பாதிக்கப்படும் செய்திகள் அதிகரித்து வரும் நிலையில் நாய்களிடமிருந்து சிறுவர்கள் சிலர் தப்பித்த வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த சில காலமாக நாய்கள் மக்களை கடிக்கும் சம்பவங்களும், தாக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் வட மாநிலங்களில் சில பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்கல் லிப்டில் செல்பவர்களை கடித்த வீடியோக்கள் வைரலாகியது.

கேரளாவில் 12 வயது சிறுமி ஒருவர் பால் பாக்கெட் வாங்க கடைக்கு சென்றபோது தெரு நாய்கள் கடித்ததில் அச்சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதை தொடர்ந்து பல பகுதிகளில் தெருக்களில், குடியிருப்பு பகுதிகளில் மக்களை நாய்கள் தாக்கு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் தற்போது கேரளா மாநிலம் கன்னூரில் சிறுவர்களை நாய்கள் துரத்தும் வீடியோ வைரலாகியுள்ளது. நேற்று குடியிருப்புகள் அதிகம் இல்லாத அப்பகுதியில் சுற்றி திரிந்த 7க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அப்பகுதி சிறுவர்கள் இருவரை துரத்தி வந்தன.

வேகமாக ஓடிவந்த அவர்கள் ஒரு வீட்டிற்குள் புகுந்து கதவை மூடிக் கொண்டனர். இந்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ள நிலையில் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுபெற்றுள்ளன.