1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. huj is allowed for only two dose vaccinated people

2 தவணை தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்துக்கு அனுமதி: அதிரடி அறிவிப்பு

ஹஜ் பயணம்
2 தவணை தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்துக்கு அனுமதி: அதிரடி அறிவிப்பு
இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ஹஜ் பயணத்திற்கு அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியா மற்றும் சவுதி அரேபிய அரசுகள் எடுக்கும் முடிவுக்கு உட்பட்டு இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
ஹஜ் புனித யாத்திரையில் பங்கேற்கும் நபர்களின் சுகாதார நலத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்
 
ஹஜ் பயணத்தின் முழுவிவரங்கள் இணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படுவதாகவும் இதுவரை 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பம் செய்துள்ளதாகவும் இவர்களில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்
அடுத்த கட்டுரையில்
சென்னை பல்கலையின் செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!