செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 8 ஜனவரி 2022 (16:52 IST)

சென்னை புறநகர் ரயில்களின் பயணிக்க தடுப்பூசி கட்டாயம்!

இந்தியாவில் சில மாதங்களாகக் குறைந்து வந்த கொரொனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்குடன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில்  சென்னை புறநகர் ரயில்களின் பயணிக்க தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் என ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதாவது: மாஸ்க் அணியாமல் ரயில் நிலையத்தில்  பயணிகள்   நடமாடினால் அவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், சென்னை புற  நகர் ரயில்களில் பயணிக்க கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.