செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (14:03 IST)

பாஜகவுக்கு எதிரான கூட்டணி: காங்கிரஸ் தலைமையிலா? மம்தா விளக்கம்...

தெலங்கானா முதல்வர் சந்தரசேகர் ராவ் மூன்றாவது பெரிய தேசிய கட்சியை உருவாக்க வேண்டும் என கூறியதற்கு மேற்வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி ஆதரவு தெரிவித்தார். அதன் பின்னர் மூன்றாம் பெரிய தேசிய கட்சியை உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில், இது குறித்து மம்தா பேனர்ஜி பின்வருமாறு பேசியுள்ளார். அவர் கூறியதாவது, சமீபத்தில் நடந்த திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில், பாஜகவுக்கு எதிராக எங்கள் கட்சியோடும் பழங்குடியின அமைப்புகளோடும் கூட்டணி அமைக்குமாறு ராகுல் காந்தியிடம் கூறினேன். 
 
ஆனால், காங்கிரஸ் எனது யோசனையை கேட்கவில்லை. நாடாளுமன்றத்தில் எங்கள் கட்சியின் ஒத்துழைப்பை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். ஆனால், மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் ஒத்துழைப்பை தர முன்வரவில்லை. 
எனவே, பாஜகவிற்கு எதிராக தேசிய அளவில் அமைக்கப்போகும் கூட்டணியில் காங்கிரஸ் ஒரு பங்குதாரராக சேரலாமே தவிர, கூட்டணியின் தலைவராக சேர முடியாது. 
 
காங்கிரஸ் இந்த தியாகத்தை செய்துதான் ஆக வேண்டும். கூட்டணியில் மாநிலங்களுக்கு ஏற்ப எந்த கட்சி பலமாக இருக்கிறதோ அந்தக் கட்சி பாஜகவுடன் நேருக்கு நேர் மோதட்டும் என மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.