1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (09:31 IST)

இன்று தீர்ப்பு வழங்க உள்ள நீதிபதிகள் இதற்கு முன்னர் எப்படி தீர்ப்பு வழங்கினார்கள்?

இன்று தீர்ப்பு வழங்க உள்ள நீதிபதிகள் இதற்கு முன்னர் எப்படி தீர்ப்பு வழங்கினார்கள்?

தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த நாடே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு மனுவின் தீர்ப்பு.


 
 
தமிழக அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் அடங்கிய இரண்டு பேர் கொண்ட அமர்வு வழங்க உள்ளது.
 
நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் அடங்கிய இந்த அமர்வு இதுவரை 12 வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் ஆச்சரியப்படும்விதமாக 8 வழக்குகளில் உயர் நீதிமன்ற தீர்ப்பையே இந்த அமர்வு உறுதி செய்துள்ளது. மீதமுள்ள 4 வழக்குகளில் தான் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்.
 
இதற்கு முன்னர் வழங்கிய தீர்ப்புகளில் இவர்களில் ஒரு நீதிபதி தீர்ப்பை வழங்குவார் மற்றொரு நீதிபதி அந்த தீர்ப்பை அப்படியே வழிமொழிவார். ஆனால் முதல்முறையாக இவர்கள் இருவரும் தனித்தனியே தீர்ப்பு எழுதியுள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த வழக்கில் தான் இந்த அமர்வு நீதிபதிகள் முதல்முறையாக தனித்தனியாக தீர்ப்பு வழங்க உள்ளனர்.