1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வியாழன், 8 டிசம்பர் 2022 (13:17 IST)

இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கடத்தப்படுகிறார்களா? பரபரப்பு தகவல்

congress
இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளதை அடுத்து இமாச்சல பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது
 
இதனை அடுத்து காங்கிரஸ் கட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி சான்றிதழை பெற்றது உடனடியாக சத்தீஸ்கர் மாநிலத்துக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை 38 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதால் அக்கட்சி கிட்டதட்ட ஆட்சியை பிடித்து விட்டதாகவே கருதப்படுகிறது. 
 
இந்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விலை போகாமல் இருப்பதற்காக வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்பிக்கள் உடனடியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் அழைத்துச் செல்லப்படுவர் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran