புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2018 (10:41 IST)

ஊழல் வழக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் உயரதிகாரி ராஜேஷ் ஜிந்தால் அதிரடியாக கைது

மும்பையில் உள்ள ஒரு பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை வைர வியாபாரி ஒருவருக்கு ரூ.11.400 கோடி கொடுத்து  மோசடியில் ஈடுபட்ட வழக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் உயரதிகாரியான ராஜேஷ் ஜிந்தால் என்பவரை சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது.
மும்பை சேர்ந்த பிரபல வைர வியாபாரியும், தொழிலதிபருமான நிரவ் மோடிக்கு, பஞ்சாப் நேஷனல் மும்பை பரோடு கிளையில் பணிபுரியும் வங்கி ஊழியர்கள், வங்கி பணம் ரூ.11,400 கோடியை, வங்கி ஆவணங்களில் குறிப்பிடாமல், எந்த ஆவணங்களும் இல்லாமல் நிரவ் மோடிக்கு கொடுத்துள்ளனர். இந்த மோசடி குறித்து விசாரிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி சிபிஐ-யிடம் புகார் அளித்துள்ளது. இதையடுத்து நிரவ் மோடி தலைமறைவானார். 
 
பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2009 ஆம் ஆண்டு முதல் 2011 வரை பதவி வகித்த  உயரதிகாரியான ராஜேஷ் ஜிந்தாலை சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது.