புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 15 பிப்ரவரி 2018 (17:25 IST)

போலி ஐடி அதிகாரியின் பின்னணியில் தீபா பேரவை நிர்வாகிகளா? புதிய திருப்பம்

சமீபத்தில் தீபாவின் வீட்டில் ஐடி ரெய்டு செய்யப்போவதாக நுழைந்த போலி ஐடி அதிகாரியாக நடித்த பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். அவர் அளித்த முதல்கட்ட வாக்குமூலத்தில் தனக்கு போலி ஐடி கார்டு கொடுத்தவர் தீபாவின் கணவர் மாதவன் என்றும் குறிப்பிட்டிருந்தார்

இந்த நிலையில் மாதவன் இன்று சென்னை போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தீபாவின் வீட்டில் உள்ள நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடிக்க தீபா பேரவை நிர்வாகிகளுடன் பிரபாகரன் கூட்டுச்சதி செய்ததாகவும், இதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்

இதுகுறித்த விசாரணையில் மாதவனுக்கும் பிரபாகரனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரியவந்துள்ளதாம். மேலும் மாதவன் தனக்கு கொரியர் மூலம் போலி ஐடி கார்டை அனுப்பியதாக  கூறியது பொய்தானாம். சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனம் மாதவனிடம் இருந்து எந்த ஆவணத்தையும் பிரபாகரனுக்கு அனுப்பப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

எனவே பிரபாகரனுக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.