செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 ஜனவரி 2022 (18:41 IST)

ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு உயரிய விருது

கடந்தாண்டு  டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஜாவ்லின் த்ரோ விளையாட்டில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்தார்.

இதையடுத்து, நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற ஆகஸ்டு 7ம் தேதியை ”ஈட்டி எறிதல்” நாளாக கொண்டாட இந்திய தடகள சம்மௌனம்முடிவு செய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நீரஜ் சோப்ரா உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றதன் மூலம் இந்தியாவில் 120 ஆண்டுகளுக்கு பிறகு இந்தச் சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா. இவருக்கு  சாதனையைப் பாராட்டி அவருக்கு மத்திய அரசு கேல் ரத்னா விருது கொடுத்து கவுரவித்தது.ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு உயரிய விருதான பரம் விசிஷ்ட் சோவா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராணுவத்தில் சுபேதாரராக பணியாற்றும் நீரஜ் சோப்ராவுக்கு  நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.