திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (23:35 IST)

நடுவானில் விமானிக்கு மாரடைப்பு!

விமானத்தை இயங்கிச் சென்ற விமானிக்கு நடுவானில் மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேச விமான நிறுவனம் பீமன் பங்களதேஷ் ஏர்லைன்ஸ். இந்த நிறுவனத்தின் போயிங்ரக விமானம்  இன்று ஓமன் தலைநகர் மாஸ்கட்டில் இருந்து 126 பயணிகளுடன் வங்கதேச தலைநகர் டாக்காவிற்குச் வந்து கொண்டிருந்தது.

அப்போது, விமானம் இந்திய வான் எல்லைக்குட்பட்ட சத்தீஸ்கருக்கு மேல் பறந்து கொண்டிருக்கும்போது,  விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

உடனே இதுகுறித்து கொல்கத்தாவில் உள்ள வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மஹாராஷ்டிர மாநில நாக்பூரில் இந்த விமானம் தரையிரக்கப்பட்டது.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.