1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 8 அக்டோபர் 2024 (11:55 IST)

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பின்னடைவு.. காங்கிரஸ் அதிர்ச்சி..!

Vinesh Phogat
ஹரியானா மாநிலத்திற்கு சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட்ட நிலையில் அவர் பின்னடைவில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் இந்தியாவின் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை அடுத்து அவரது பதக்க வாய்ப்பு பறிபோனது.

இந்த நிலையில் திடீரென மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்த நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அவருக்கு அரியானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஜுலானா என்ற தொகுதியில் அவர் போட்டியிட்ட நிலையில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் யோகேஷ் குமார் போட்டியிட்டார்.

இந்த நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முதல் சுற்று முடிவில் 214 வாக்குகள் முன்னிலையில் இருந்த போகத்  இரண்டாவது சுற்றில் பின்னடைவில் உள்ளார். அவர் 2039 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார் என்றும் பாஜக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன


Edited by Siva