புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 27 மார்ச் 2021 (10:38 IST)

வாக்குசாவடியில் துப்பாக்கிச்சூடு, 2 வீரர்கள் காயம் : மேற்குவங்கத்தில் பரபரப்பு!

தேர்தல் நடைபெற்று வரும் மேற்குவங்கத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 2 வீரர்கள் காயம் என தகவல். 

 
மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலத்தின் ஒரு சில தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. ஆம், மேற்குவங்கத்தின் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், அசாம் மாநிலத்தின் 47 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, கடந்தமுறையைவிட தற்போது மாநிலம் முழுவதும் கூடுதலாக 37% வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  
 
முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் இடங்களில் பதற்றமான பகுதிகளிலும் இருப்பதால் கூடுதல் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே,  தேர்தல் நடைபெற்று வரும் மேற்குவங்கத்தின் பகவான்பூர் தொகுதியில் வாக்குச்சாவடி மையம் அருகே துப்பாக்கிச்சூடு  நடைபெற்றுள்ளது. இதில் 2 பாதுகாப்புடை வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.