1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (15:33 IST)

ராகுல் ’இது’-க்கு சரிபட்டு வரமாட்டார் – ‘எது’-க்கு??

ராகுல் காந்தியிடம் அரசியலுக்கான தகுதி எதுவும் இல்லை என குலாம் நபி ஆசாத் பேட்டி.

 
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸை நிலைப்படுத்த ஜம்மு மாநில காங்கிரஸிற்கு பல்வேறு பதவிகளில் பலரும் நியமிக்கப்பட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் பிரச்சாரக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் அவர் அந்த பதவி வழங்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளாக அந்த பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து கட்சி செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருந்து வந்த குலாம் நபி ஆசாத் சமீபத்தில் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். 

சோனியாவுக்கு இவர் எழுதிய ராஜினாமா கடிதத்தில் ராகுல் காந்தி மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இதனைத்தொடர்ந்து அவர் தனது சமீபத்திய பேட்டியில் ராகுல் காந்தி குறித்து கூறியதாவது,

தற்போது இருக்கும் காங்கிரஸ் காரியக் கமிட்டி அர்த்தமற்றது. சோனியா காந்தி தலைமையில் கட்சி இருந்த போது காங்கிரஸ் காரியக் கமிட்டி மட்டுமே இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நிலைமை அப்படி இல்லை.

பல்வேறுகட்ட ஆலோசனைக்குப் பின்னரே முக்கிய முடிவுகளை சோனியா காந்தி எடுப்பார். ஆனால், ராகுல் காந்தி தலைமையில் அது முற்றிலுமாக அழிக்கப்பட்டது. ஆனால், 2004இல் ராகுல் காந்தி வந்த பிறகு நிலைமை அப்படியே மாற தொடங்கியது. அவர் ராகுல் காந்தியை அதிகம் சார்ந்து இருக்கத் தொடங்கினார். ஆனால் அவருக்கு அந்த திறன் இல்லை. ராகுல் காந்தி நல்ல மனிதர் தான். ஆனால், அரசியலுக்கான தகுதி எதுவும் அவரிடம் இல்லை என வெளிப்படையாக பேசியுள்ளார்.