திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (12:11 IST)

ஆபரேசன் தாமரை, ஆபரேசன் சேறு ஆகிவிடும்: அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

kejriwal
டெல்லி அரசை கவிழ்க்க வேண்டும் என்ற ஆபரேஷன் தாமரை, ஆபரேஷன் சேறு என்று ஆகிவிடும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார். 
 
டெல்லி அரசை கவிழ்ப்பதற்காக ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜக விலை பேசியதாகவும் ஆனால் எந்த ஒரு எம்எல்ஏவும் விலை போகவில்லை என்றும் டெல்லி சட்டசபையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்
 
நாட்டில் உள்ள பல ஆட்சிகளை பாஜக கவிழ்த்து வருகிறது என்றும், கோவா கர்நாடகம் மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் மணிப்பூர்  ஆகிய மாநிலங்களை கவிழ்த்த பாஜக இன்று  டெல்லியையும் கவிழ்க்க முயற்சிக்கின்றது அவர் குற்றம் சாட்டினார் 
 
ஆனால் டெல்லி அரசை கலைக்க வேண்டுமென்று ஆபரேஷன் தாமரை ஆபரேஷன் சேறு என ஆகிவிடும் என்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஒருவர் கூட விலை போகமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது