மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு.. மத்திய அரசு வெளியிட்ட நெறிமுறைகளின் விவரங்கள்..!
மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு வெளியிட்ட வழிமுறைகள்:
மாற்றுத்திறனாளிகளுக்கு 40 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி, அவர்களுக்கு அரசு பணிகளை கண்டறிந்து நிரப்ப குழு அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:
40 சதவீத குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற வேண்டும். அவர்களுக்கு அரசு பணிகளை கண்டறிவது அவசியம். இதற்காக, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் குழு அமைத்து, அவர்களுக்கான பணிகளை மதிப்பீடு செய்ய வேண்டும். அந்த குழுவில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் பிரதிநிதிகள் இருக்க வேண்டும்.
குழுவின் மூலம் கண்டறியப்பட்ட பணிகள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். தொழில்நுட்ப பணிகளுக்கு தேவையான திறன்களை மதிப்பீடு செய்து, பார்வையற்றோர், செவித் திறன் குறைந்தோர், அறிவுசார் குறைபாடுகள் கொண்டோர் போன்ற பிரிவுகளில் உள்ளவர்களுக்கு நேரடி நியமனம் வழங்க வேண்டும். அதன் பின்னர், காலியிடங்களை சரியான நேரத்தில் நிரப்ப வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, இட ஒதுக்கீடு கொள்கைகள் இருந்து விலக்கு பெறுவதற்கான முறையை பின்பற்ற வேண்டும். மேலும், இந்த நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக, கடந்த 2021-2022 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Edited by Siva