ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு !
நேற்று இந்தியா முழுவதும் உள்ள 30 லட்சம் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழக்க மத்திய அமைச்சரவைக் கூட்டதில் ஒப்புதல் வழங்கப்பட்டத்தை அடுத்து அறிவிக்கப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டுப் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் இன்று நாட்டு முழுவதும் உள்ளா 11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள்கள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே பண்டிகை காலப் போனஸ் வழங்க ரூ.2,081 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்வே ஊழியர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.