ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2024 (13:40 IST)

பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என் ரவி சந்திப்பு.! தமிழக அரசியலில் பரபரப்பு..!!

Ravi Meet Modi
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் நிலவும் சட்டமன்ற பிரச்சனை குறித்து பிரதமர் மோடியுடன், அவர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை, எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து மனு அளித்தனர். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் ரவி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றதற்கும் ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார்.


தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும் பிரதமர் மோடியுடன், ஆளுநர் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரதமரை தமிழக ஆளுநர் சந்தித்து பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.