1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (15:15 IST)

1000 பஸ்கள் வாங்கியதில் ஊழல்: புகாரை விசாரிக்க அனுமதி வழங்கினார் கவர்னர்!

Kejriwal
ஆயிரம் பேருந்துகள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக டெல்லியில் ஆட்சி புரிந்துவரும் ஆம் ஆத்மி அரசு மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை செய்ய அம்மாநில கவர்னர் அனுமதி வழங்கியதாக கூறப்படும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் மதுபான ஊழல் டெல்லி அரசை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதும் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசாடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் டெல்லி போக்குவரத்து கழகம் ஆயிரம் பேருந்துகள் வாங்கியதில் முறைகேடுகள் செய்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை சிபிஐ விசாரிக்க டெல்லி கவர்னர் அனுமதி வழங்கியுள்ளார் 
 
தொடர்ச்சியாக டெல்லியில் ஆட்சி புரியும் ஆம் ஆத்மி கட்சி மீது ஊழல் புகார்கள் எழுந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது