1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 5 செப்டம்பர் 2022 (17:45 IST)

திருப்பதி கோவிலில் நேர்ந்த அவமானம்: பிரபல நடிகை புகார்

tirupathi
திருப்பதி கோவிலில் தனக்கு அவமானம் நிகழ்ந்ததாக பிரபல நடிகை ஒருவர் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த தனக்கு டிக்கெட் இல்லை எனக்கூறி அவமானப்படுத்தியதாக நடிகை அர்ச்சனா கவுதம் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
திருப்பதியில் தரிசனம் செய்ய சிபாரிசு கடிதம் பெற்றுக் கொண்டு வந்ததாகவும் ஆனால் அங்கிருந்த தேவஸ்தான ஊழியர்கள் அநாகரிகமாக தன்னிடம் பேசியதாகவும் 10,000 நன்கொடை வழங்கி அதன் பின்னர் விஐபி டிக்கெட் ரூ 500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
மேலும் இந்துமத கோவில்கள் கொள்ளையடிக்கும் கூடாரமாக மாறிவிட்டது என்றும் மதத்தின் பெயரால் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்