வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (19:48 IST)

அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த 6 மாதங்களுக்கு தடை...

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்கள் இனிவரும் 6 மாதங்களுக்கு போராட்டம் நடத்த இயலாதவாறு எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் பராமரிக்கப்படும் எஸ்மா எனப்படும் முக்கிய சட்டம் அரசு துறைகளைச் சேர்ந்த அரசு பணியாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட முடியாதவாறு செய்ய  அமல்படுத்தப்பட்டுள்ளது. இது1968 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சட்டம் .
 
மேலும் நம்நாட்டில் ஜம்மு -  காஷ்மீர் மாநிலத்தை தவிர மற்ற அனைத்து மாநில அரசுகளும் தேவைக்கேற்ப அவசியம் இச்சட்டத்தை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் உள்ளது.
 
இச்சட்டம் அமைல் இருக்கும் போது யாரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாதவாறு தடுப்பதுடன் . அப்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சிறையிலும் அடைக்கலாம்.
 
போராட்டத்தில் ஈடுபட்டால் ஓராண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்பதால் யாரும் போராட்டத்தில் ஈடுபட முடியாது.
 
மேலும் உத்தரபிரதேச மாநிலத்தில் பணியாற்றும் மாநகராட்சி, நகராட்சி, உள்ளிட்ட அனைத்து உழியர்களும் அடுத்த 6 மாதங்களுக்கு போராட்டம் நடத்த முடியாதவாறு எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்தவேண்டி அம்மாநில பணியாளர்கள் நாளை( 6) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்த நிலையில் மாநில அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்று தகவல்  தெரிவிக்கின்றன.