1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 2 பிப்ரவரி 2019 (10:25 IST)

தொடர்ந்து சிக்கலில் சிக்கும் கூகுள்: அதிரடியாக அபராதம் விடுத்த அரசு

சட்டவிதிகளை மீறிய கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்ய அரசு ரூ.54 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
உலகின் நம்பர் ஒன் சர்ச் எஞ்சின் நிறுவனமான கூகுள் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இணைய உலகில் முடிசூடா மன்னனாக விளங்கி வரும் கூகுள், சமீபகாலமாக குறிப்பிட்ட நாடுகளின் சட்ட விதிகளை மீறியதற்காக அபராதம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கூகுளுக்கு ரூ.3.42 லட்சம் கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
 
இந்நிலையில் தற்பொழுது ரஷிய சட்டவிதிகளை மீறியதற்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூ.54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட தகவல்கள் தேடுதளத்த்தில் இடம்பெறக்கூடாது என்ற விதிமுறையை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.