வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 25 ஜூன் 2020 (08:41 IST)

ரிசர்வ் வங்கியின் அங்கீகாரத்தை கூகுள் பே பெறவில்லையா? டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு

பணபரிமாற்றம் செய்ய உதவும் செயலியான கூகுள் பே’ பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள ரிசர்வ் வங்கியின் அங்கீகாரத்தை பெறவில்லை என்று பொதுநல வழக்கு ஒன்றை நிதி பொருளாதார அறிஞர் அபிஜித் மிஸ்ரா தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனு மீதான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.என்.படேல், பிரதீக் ஜலான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது ஆஜரான ரிசர்வ் வங்கியின் வழக்கறிஞர் வி.கிரி, ‘‘கூகுள் பே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள உதவும் செயலி என்றும் அதில் எந்தவித விதிமீறலும் இல்லை என்றும் தெரிவித்தார்.
 
மேலும் கூகுள் பே என்பது ஒரு செயலியை அளிக்கும் 3-ம் தரப்பு சேவை நிறுவனம் மட்டும்தான் என்றும், பணப் பரிவர்த்தனைக்கென தனி சிஸ்டம் எதையும் அது உருவாக்கி செயல்படுத்தவில்லை என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 
ஆனால் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாயல் பாஹல், பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள ரிசர்வ் வங்கியின் அங்கீகாரத்தை கூகுள் பெறவில்லை என்று குறிப்பிட்டதை அடுத்து இதுகுறித்து விரிவான விசாரணை ஜூலை 22-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.