வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 15 நவம்பர் 2017 (16:37 IST)

நேரு பிறந்தநாளை மறந்த கூகுள் முதல் பெண் வழக்கறிஞர் பிறந்தநாளுக்கு டூடுள்

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு பிறந்தநாளான நேற்று துளையிடும் கருவியின் பிறந்தநாளை கொண்டாடிய கூகுள் இன்று இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் கார்னெலியா சோராப்ஜியின் பிறந்தநாளை டூடுள் வெளியிட்டு கொண்டாடி வருகிறது.


 

 
நேற்று இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இவரது பிறந்தநாள் இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று கூகுள் நேருவின் பிறந்தநாளுக்கு பதில் துளையிடும் கருவியின் பிறந்தநாளுக்கு டூடுள் வெளியிட்டு கொண்டாடியது.
 
இந்நிலையில் இன்று இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் கார்னெலியா சோராப்ஜியின் பிறந்தநாளுக்கு டூடுள் வெளியிட்டுள்ளது. கார்னெலியா சோராப்ஜி இந்தியாவின் பட்டப்படிப்பு முடித்த பின்னர் லண்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற முதல் பெண்மணி. 
 
சட்டம் பயின்று இருந்தாலும் பெண்கள் வழக்கறிஞராக செயல்பட இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. பின்னர் 1924ஆம் ஆண்டு முதல்முறையாக பிரிட்டன் ஆட்சியில் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.