கமல்ஹாசனின் திருச்சி வருகையால் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள்: வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
கமல்ஹாசனின் திருச்சி வருகையால் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள்
கமலஹாசன் மூன்றாம் கட்ட பிரச்சாரமாக நேற்று திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார் என்பதும் திருச்சியின் பல இடங்களில் அவர் செய்த பிரச்சாரத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கமல்ஹாசனால் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் உள்ள தனியார் வாடகை ஹெலிகாப்டர் நிறுவனம் ஒன்றில் பயணம் செய்வதற்காக சுற்றுலா பயணிகள் சிலர் ஏற்கனவே அட்வான்ஸ் பணம் கட்டி இருந்தனர்.
ஆனால் பணம் கட்டிய சுற்றுலா பயணிகளுக்கு ஹெலிகாப்டரை அனுப்பாமல் கமல்ஹாசன் மதுரையில் இருந்து திருச்சி செல்வதற்காக ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இதனால் பணம் கட்டி இருந்த சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் நிறுவனத்திடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
மதுரையை சுற்றி பார்ப்பதற்காக 15 நிமிடங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் தாங்கள் அந்த நிறுவனத்தில் ஹெலிகாப்டருக்காக பணம் கட்டியதாகவும் ஆனால் தங்களுக்கு ஹெலிகாப்டரை அனுப்பாமல் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த கமலஹாசன் அவர்களுக்கு அந்த ஹெலிகாப்டரை அனுப்பி விட்டதாகவும் சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டினர்
ஹெலிகாப்டரில் பயணம் செய்வதற்காகவே பணம் கட்டி காலை 9 மணிமுதல் காத்திருந்ததாகவும் ஆனால் ஹெலிகாப்டர் நிறுவனம் தங்களுக்கு ஹெலிகாப்டரை அனுப்பவில்லை என்றும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது