1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 23 ஜனவரி 2022 (08:59 IST)

மொத்தம் 40 எம்.எல்.ஏக்கள்; அதில் 24 பேர் கட்சிதாவல்: அதிர்ச்சியில் கோவா அரசியல்

மொத்தம் 40 எம்.எல்.ஏக்கள்; அதில் 24 பேர் கட்சிதாவல்: அதிர்ச்சியில் கோவா அரசியல்
கோவா மாநிலத்தில் மொத்தம் 40 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் அதில் 24 எம்எல்ஏக்கள் காட்சி தாவியதாக வெளி வந்திருக்கும் செய்தி அம்மாநில மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. 
 
கோவா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் எம்எல்ஏக்கள் கட்சி தாவும் வழக்கமும் அதிகமாகி வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக காங்கிரஸ் மற்றும் சில சிறிய கட்சிகள் என மொத்தம் இருபத்தி நான்கு பேர் கட்சி தாவி உள்ளதால் வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன
 
கோவா மாநிலத்தில் மொத்தம் 40 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் கட்சித் ஆகியுள்ளது வாக்காளர்களுக்கு செய்யும் துரோகம் என அம்மாநில பத்திரிகை விமர்சனம் செய்து வருகிறது
 
 ஜனநாயகம் மீறிய செயல் என்றும் வாக்களித்த மக்களுக்கு தரும் அவமரியாதை என்றும் அசோசியேசன் ஆப் ரீபார்ம்ஸ் என்ற அமைப்பு விமர்சனம் செய்துள்ளது .