வியாழன், 18 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 18 நவம்பர் 2025 (18:09 IST)

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!
முன்னணி சமூக ஊடக தளங்களில் ஒன்றான எக்ஸ் தளம் இன்று உலகளவில் திடீரென செயலிழந்தது. மாலை 5 மணி அளவில், பயனர்கள் இந்த சமூக ஊடக தளத்தை அணுகுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
 
எக்ஸ் தளத்தின் வலைத்தளம் மற்றும் மொபைல் செயலி இரண்டிலும் உள்நுழைவதிலும், தகவல்களை பார்ப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டதாக உலகம் முழுவதிலுமிருந்து பல பயனர்கள் புகாரளித்தனர்.
 
இந்த திடீர் செயலிழப்புக்கான காரணம் குறித்து எக்ஸ் நிறுவனத்திடமிருந்தோ அல்லது அதன் உரிமையாளர் எலான் மஸ்கிடமிருந்தோ எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.
 
எக்ஸ் இதுபோன்ற தொழில்நுட்பச் சிக்கல்களை சந்திப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டிலும் பலமுறை இத்தளம் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva