வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 6 ஜூன் 2019 (16:24 IST)

சிறுமிகளின் ஆபாச வீடியோ விவகாரம் : குற்றவாளிகள் கைது .. திடுக் தகவல்

கேரளாவில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பிய குற்றவாளிகள் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் வாட்ஸ் அப், உள்ளிட்ட சமூகவலைதளங்களில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் பரப்பப்படுவதாக கேரள சைபர் கிரைம் தலைவர் மனோஜ் ஆபிரகாமுக்கு புகார்கள் வந்தன.
 
இதையடுத்து ஆபாச வீடியோக்கள் பரப்புவோரைக் கைதுசெய்ய ஆபரேசன் பி ஹண்ட் என்ற தனிப்படை அமைக்கப்பட்டு, கேரளாவில் உள்ள இடங்களில் போலீஸார் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.
 
இதனையடுத்து தற்போது சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பரப்பியது தொடர்பாக  4 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
 
அவர்களிடம் இருந்து செல்போன், லேப்டாப், கம்யூட்டர்கள் முதலிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 
 
இந்நிலையில் இக்குற்றவாளிகள் மீது  5 ஆண்டுகள் வரை தண்டனை பெறக்கூடிய வகையிலும், ரூ 10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையிலும் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.