செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 3 ஜூன் 2019 (13:55 IST)

ஓரின ஈர்ப்பில் தாலி கட்டிக்கொண்ட சிறுமியர் : பரபரப்பு சம்பவம்

விழுப்புரம் மாவட்டம் திருகோவிலூரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவிலில் நேற்று முந்தின ( சனிக்கிழமை ) மாலை வேளை சுமார் 6 மணிக்கு, இரண்டு சிறுமியரில், ஒரு சிறுமி மற்றொரு சிறுமிக்குத் தாலி கட்டி, காலில் மெட்டி அணிவித்தார். இதைப் பார்த்த அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீஸார், கோவிலில் நின்றிருந்த இரு சிறுமியரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
 
அதில் அவர்கள் கூறியதாவது :
 
இரு சிறுமியரும் கடலூரைச் சேர்ந்தவர்கள். இருவரும் ஒரே பள்ளியி படித்துவந்துள்ளனர். அதில்லாமல் +2 தேர்தல் அதிக மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவர்கள் இருவரும் சில சில வருடஙக்ளாக நெருக்கமாகப் பழகியுள்ளனர்.இதனால் இருவரும் ஓரின ஈர்ப்பு உடையவர்களாக மாறினர். 
 
மேலும். இருவரில் ஒரு சிறுமி தன்னை ஆணாக பாவித்துக்கொண்டு, மற்றோரு சிறுமியிடம்  உன்னைத் தாலி கட்டிகொள்வதாகக் கூறியுள்ளார்.
 
இதையடுத்து கடந்த 31 ஆம்தேதி இருவருக் வீட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிகிறது. கையில் இருந்த பணத்துடன் பல இடங்களுக்குச் சென்றுவிட்டு முன்தினம் மாலை வேளையில் திருக்கோவிலூரில் வந்த இருவரில் ஒரு சிறுமி தான் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை தாலிகயிறு , மெட்டி வாங்கியுள்ளார்.
 
பின்னர் கோவிலில் வைத்து,தன்னை ஆணாக பாவித்துக்கொண்ட சிறுமி மற்றொருவருக்கு தாலி கட்டும் போது பக்கதர்கள் பார்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
போலீஸார் இதைகேட்டு அதிர்ச்சி அடைந்து அவர்களுடைய பெற்றோருக்குத் தகவல்தெரிவித்து, திருக்கோவிலூர் வரவழைத்தனர், இரு சிறுமியருக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.