புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 1 ஜூன் 2019 (14:40 IST)

’காசு ’இல்லாம கோயிலுக்கு வரக்கூடாதா ? ஸ்ரீரங்கம் கோயிலில் சர்ச்சை நோட்டீஸ்

திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். சாமியை தரிசணம் செய்வதற்காக வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்துகூட பக்தர்கள் வருவது வாடிக்கை. அவர்கள் கோயிலுக்கு நுழையும் முன்னர் சோதனைக்குப்பிறகு உடைமைகள்,செல்போன், கேமரா ஆகியவற்றினை உள்ளே கொண்டுசென்று வந்தனர்.
இந்நிலையில் தற்போது கோயில்நிர்வாகம் சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதில் கோயில் இணைஆணையர்  ஜெயராமன் வெளியிட்டு , அக்கோயிலின் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ள அந்த அறிவிப்பில் உள்ளதாவது :

கோயில் பாதுகாப்பு மற்றும் பக்தர்கள் நலன் காக்கும் வண்ணம் கோயிலில் செல்போன் உபயோகத்தைத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கோயிலின் 3 பிரதான நுழைவாயில்களில் பாதுகாப்புப் பெட்டகங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் கொண்டுவரும் செல்போன்களை வைத்துக்கொள்ளலாம் அதற்குக் கட்டணமாக ரூ.10 விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயிலில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிர்வாகம் இந்நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.  அதாவது இதுவரை பாகிஸ்தானில் இருந்து 2 முறை இக்கோயிலுக்கு மிரட்டல் வந்துள்ளதா, இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.
 
ஆனால் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்கக் கட்டணம் வசூலிப்பதற்குப் பதில் இதை இலவ சேவையாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
எனவே கோயில் நிர்வாகத்தின் இந்நடவடிக்கையால் பக்கதர்கள் கையில் காசு இருந்தால்தான்கோயிலுக்குள் செல்ல முடியும் என்ற நிலைமை உருவாகிவிடும் பொதுநோக்கர்கள் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.