பெண்களை சீரழித்த போலி சாமியார் : திடுக்கிடும் சம்பவம்

vizupuram
Last Modified செவ்வாய், 28 மே 2019 (15:39 IST)
காஞ்சிபுரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை அடுத்த சூணாம்பேடு என்ற கிராமத்தில் வசித்து வந்தவர்ன் மணி (38). இவர் 10 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூரில் ஒரு கோவில் கட்டி அங்கு குடியேறினார்.
பில்லி, சூனியம், ஏவல் எடுப்பதுதான் இவரது முக்கிய தொழிலாக இருந்தது. அதில்லாமல் முக்காலங்களையும் கணித்துக் கூறிவதால் இவரது கோவிலுக்கு பெண்கள் கூட்டம் திரண்டுள்ளது.அதனால் மக்கள் இவரை சாமியார் என அழைத்துவந்தனர்.
 
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருணாகரன் என்பவர் தன் மகளுக்கு ஏற்பட்ட காதலைப் பிரித்துத் தருமாறு கடந்தாண்டு இவரிடம் கேட்டுள்ளார்.  
 
இதனையடுத்து கருணாகரன் வீட்டுக்குச் சென்ற மணி, இந்த வீட்டில் தீய சக்தி இருக்கிறது. அதனால் ஊரில் ஊரில் கோவில் கட்டுவதால் உங்கள் பெண் இங்கு இருக்கக்கூடாது. வேறு இடத்தில்தான் இருக்கவேண்டும். வேண்டுமானால் உங்கள் மகள் என் வீட்டில் இருக்கலாம். நான் தந்தையைப் போல் வளர்த்துக்கொள்கிறேன் என்று கருணாகரனிடன் , கேட்டுள்ளார்.
 
இதனைக்கேட்டு பயந்த பெற்றோர் தீயசக்தியிடமிருந்து மகள் தப்பித்தால் போதும் என்று கருதி தமது 17 வயது மகளை சாமியார் பொறுப்பில் வளர்க்க அனுமதித்தனர். இந்நிலையில் சாமியார் செலவில் இளம்பெண் இரு ஆண்டுகள் படித்தார்.
 
இந்நிலையில் கடந்த மாதம் இளம்பெண்ணை சாமியார் பலாத்காரம் செய்துள்ளான். இதனை அப்பெண் தன் தந்தையிடம் கூறியுள்ளாள்.இதையடுத்து கருணாகரண் திண்டிவனம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
 
பின்னர் போலி சாமியார் மணி மற்றும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட சிஷ்யை ஹேமா,(40) என்பவரை போலீஸார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதில் போலீஸார் விசாரணையில் :மணி 10வது முடித்ததும் சாமியாரானால் வாழ்க்கையில் முன்னேறிவிடலாமென்று நினைத்து மாந்திரீகம், ஜோசியம் , பார்த்து பெண்களை மயக்கி அவர்களை பலாத்காரம் செய்துள்ளான்.மேலும் இவர், கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட பெண்களைச் சீரழித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :