வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 7 மார்ச் 2024 (16:49 IST)

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

Pondy Child
புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நிறைவு பெற்ற நிலையில், அவர்கள் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்..
 
புதுச்சேரி மாநில முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இது குறித்து போலீசார் நடத்தி விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது தெரியவந்தது. அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது. 
 
மேலும் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியைத் தேடி வந்துள்ளார். மேலும் கருணாஸ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தெரிய வந்துள்ளது.
 
சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறுமியின் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கை கால்கள் முறிக்கப்பட்டு இருக்கிறது. கன்னங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடற்கூறாய்வு அறிக்கையின்படி பார்த்தால் சிறுமி பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகி இருப்பது அம்பலம் ஆகியுள்ளது. இந்த சம்பவத்தில் நேரடியாக தொடர்புடைய இரண்டு பேர் மற்றும் சந்தேகத்தில் ஐந்து பேர் என மொத்தம் ஏழு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 
இந்நிலையில் கைதான கருணாஸ், விவேகானந்தன் ஆகியோருக்கு மருத்துவ பரிசோதனை நடந்து முடிந்தது. இதை அடுத்து அவர்களை போலீஸார் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர்.