வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 15 நவம்பர் 2023 (13:59 IST)

பிரபல பாடகரைக் காதலிக்கிறாரா மிருனாள் தாக்கூர்.. இணையத்தில் பரவும் தகவல்!

பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் சீதாராமம் திரைப்படம்  மூலமாக தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். தெலுங்கில் உருவான அந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஹிட் ஆகி ஆகியதால் ஒரே படத்தில் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.

இதையடுத்து அவர் நானியோடு நானா மற்றும் விஜய் தேவரகொண்டாவோடு பேமிலி ஸ்டார் உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் நிலையில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்போது அவர் தெலுங்கு இளைஞரை காதலிப்பதாகவும் அவரை விரைவில் மணமுடித்து செட்டில் ஆகவுள்ளதாகவும் சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவின.

ஆனால் அதை மறுத்துள்ளார் மிருனாள். இந்நிலையில் இப்போது மிருனாள் தாக்கூர் பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் பாடகர் பாட்ஷாவைக் காதலிப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவ, அதை மறுத்துள்ளார் பாடகர் பாட்ஷா. இருவரும் ஷில்பா ஷெட்டி நடத்திய தீபாவளி பார்ட்டியில் ஒன்றாக வலம் வந்ததை அடுத்து இந்த வதந்தி பரவியதாக தெரிகிறது.