1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 1 ஜூலை 2021 (19:35 IST)

வீதியில் உலா வந்த முதலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

வீதியில் உலா வந்த முதலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
கர்நாடக மாநிலத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் திடீரென ராட்சத முதலை ஒன்று வீதியில் வலம் வந்தது அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
முதலைகள் பெரும்பாலும் ஆறுகள் மற்றும் குளத்தில் தான் வாழ்ந்து வரும் என்ற நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோகிலபனா என்ற பகுதியில் திடீரென கிராமமொன்றில் வீதியில் ராட்சத முதலை ஒன்று உலா வந்தது 
 
முதலை வந்த தகவல் அறிந்து அந்த பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக அந்த முதலையை பிடித்துச் சென்று ஆற்றில் விட்டனர். மிகப்பெரிய முதலை ஒன்று வீதியில் சர்வ சாதாரணமாக உலா வந்ததை பார்த்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது