1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 8 ஜூன் 2021 (07:42 IST)

கர்நாடக அரசின் கொடியை ஒத்த உள்ளாடைகள்… சர்ச்சையில் சிக்கிய அமேசான்!

அமேசான் ஆன்லைன் விற்பனையகத்தில் கர்நாடக மாநில அரசின் கொடியை ஒத்த பிகினி ஆடைகள் விற்பனை செய்யப்படுவது குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.

அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படும் பிகினி உடைகளில் பல்வேறு நாடுகளின் தேசிய கொடியைப் போல வடிவமைக்கப்பட்டு இருக்கும் உள்ளாடைகள் விற்கப்படுகின்றன. மேற்கத்திய நாடுகளில் இதற்கு எதிர்ப்பு எழுவதில்லை. ஆனால் இந்தியர்கள் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. இந்நிலையில் கர்நாடக மாநில அரசின் கொடியைப் போல வடிவமைக்கப்பட்டு இருக்கும் பிகினி ஆடைகள் விற்கப்படுவதைப் பார்த்த கன்னட மக்கள் இதற்குக் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும் அமேசான் நிறுவனத்துக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று கூறியுள்ளனர். இது சம்மந்தமாக பெங்களூருவில் சில இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகின்றன.