வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 1 ஜூலை 2021 (10:03 IST)

8 போடாமல் லைசென்ஸ் வாங்க இதெல்லாம் செய்யனும்...

ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனங்களை ஓட்டி காட்ட தேவையில்லை என்ற புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டு இன்று முதல் இது அமலுக்கு வந்தது. 
 
டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டும் என்றால் தனியார் ஓட்டுநர் பள்ளிகளில் பயிற்சி பெற்றிருந்தாலும், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் நடக்கும் சோதனையில் தேர்ச்சி பெற்றால்தான், 8 போட்டு காட்டினால்தான் லைசென்ஸ் வழங்கப்படும். 
 
இந்நிலையில் அரசின் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயில்வோர், டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனங்களை ஓட்டி காட்ட தேவையில்லை என்ற புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டு இன்று முதல் இது அமலுக்கு வந்தது. 
 
பயிர்ச்சியாளர் போக்குவரத்து குறியீடுகள், போக்குவரத்து விதிமுறைகள், வாகன கட்டமைப்பு, பொதுத் தொடர்பு, முதலுதவி உள்ளிட்டவை குறித்த வகுப்புகளை நடத்த வேண்டும், வாகனங்களை மலை, கிராமம், நகரம், மேடு, பள்ளம் போன்ற பல்வேறு நில அமைப்புகளில் கற்பிக்க வேண்டும்.
 
வாகனம் ஓட்டும் சோதனை நடத்தப்பட்டு அது வீடியோவாகவும் பதிவு செய்யப்பட வேண்டும்.இந்த பயிற்சிகளில் வெற்றி பெறும் ஓட்டுனர்கள் உரிய சான்றிதழுடன் ஆர். டி.ஓ. அலுவலகத்தில் 8 போடாமலேயே லைசென்ஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.