வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 14 அக்டோபர் 2017 (14:44 IST)

கன்னட எழுத்தாளர் கெளரி லங்கேஷ் கொலையாளிகள் இவர்கள் தான்!

கன்னட எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கெளரி லங்கேஷ் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி பெங்களூரு ராஜேஷ்வரி நகரில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.



 
 
இந்த நிலையில் கெளரி லங்கேஷ் வீட்டில் மற்றும் பக்கத்து வீடுகளில் இருந்த சிசிடிவி காட்சிகளில் இருந்து கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்படும் 2 நபர்களின் வரைபடத்தை வெளியிட்டுள்ளனர். அவர்கள் குறித்து தகவல் தெரிந்தால், அருகிலுள்ள காவல்நிலையத்தில் தெரிவிக்க பொதுமக்களை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 
மேலும் சிசிடிவி காட்சிகளை விரைவில் ஊடகங்கள் மூலம் வெளியிட உள்ளதாக கூறிய விசாரணை போலீசார் இந்த புகைப்படங்களில் இருந்து கொலையாளிகள் எந்த மதத்தினர், எந்த அமைப்பினர் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றும் இருப்பினு விரைவில் குற்றவாளிகளை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்றும் கூறினர்.