1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Today corona cases in India

90 ஆயிரமாக பதிவான தினசரி பாதிப்புகள் – கொரோனாவில் உச்சம் தொடும் இந்தியா

India
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் ஒரே நாளில் 90 ஆயிரத்திற்கு மேல் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. சமீபகாலமாக 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,51,09,286 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 325 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,82,876 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,43,41,009 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 2,85,401 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் 26 மாநிலங்களில் ஒமிக்ரான்; 2,630 பேர் பாதிப்பு!