ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 7 செப்டம்பர் 2023 (08:21 IST)

ஜி20 மாநாட்டின் இரவு விருந்து: முக ஸ்டாலின், மம்தா பானர்ஜி பங்கேற்பு..!

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் குடியரசுத் தலைவர் வைக்கும் இரவு விருந்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மேற்குவங்க முதலமைச்சராக மம்தா பானர்ஜி உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
செப்டம்பர் 9 ,10 ஆகிய தேதிகளில் இந்தியாவில் ஜி-20 குழுவின் 18 வது மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்கா. சீனா. ரஷ்யா, ஜப்பான். பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. 
 
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனேசி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் கிஷிடா உள்ளிட்டோா் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். ஆனால் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.
 
இந்த நிலையில்  நடக்கும் குடியரசு தலைவர் வைக்கும் விருந்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva