செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (15:23 IST)

ரஷ்யா - யுக்ரேன் போர்: இந்த தலைமுறையின் மிக தீவிரமான பாதுகாப்பு நெருக்கடி – நேட்டோ

ரஷ்யா – யுக்ரேன் போர் குறித்து விவரித்துள்ள நேட்டோ பொதுச் செயலாளர் யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க், யுக்ரேனில் நடைபெறும் போர் “இந்த தலைமுறையில் ஏற்பட்டுள்ள மிக தீவிரமான பாதுகாப்பு நெருக்கடி” என தெரிவித்துள்ளார்.


பிரஸ்ஸல்ஸில் இன்று நேட்டோ அவசரகால உச்சி மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் நேட்டோ நாடுகளின் தலைவர்களிடையே யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி உரையாற்றுவார் என, அவர் தெரிவித்தார். நேட்டோ நாடுகள் ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடியை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நேட்டோ நாடுகள் இவ்விவகாரம் தொடர்பாக மேலும் பலவற்றை மேற்கொள்ள வேண்டும் எனவும், ”பாதுகாப்பு துறையில் முதலீட்டை அதிகரிக்க” நேட்டோ நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் தெரிவிப்பார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

“யுக்ரேன் – ரஷ்யா நெருக்கடியை வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இன்றைய சந்திப்பு உணர்த்தும்” எனவும் அவர் தெரிவித்தார்.