ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 26 ஜனவரி 2023 (08:08 IST)

இன்று முதல் தமிழ் உள்பட 13 மொழிகளில் தீர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

supreme
இன்று முதல் தமிழ் உள்பட 13 மொழிகளில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
மேலும் மொழிபெயர்ப்பு பணிக்காக அவர் ஒரு குழுவையும் நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்ரீம் கோர்ட்டில் உள்ள தீர்ப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகி வரும் நிலையில் தமிழ் உள்பட மாநில மொழிகளிலும் வெளியாக வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது 
 
இந்த நிலையில் ஜனவரி 26 முதல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் தமிழ் உள்பட 13 மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
 
இதுவரை 34,000 தீர்ப்புகள் இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் தமிழில் மட்டும் 52 தீர்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தில் 8வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் தீர்ப்புகளின் மொழியாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva