சனி, 20 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (10:48 IST)

இன்று தேசிய சுற்றுலா தினம்! தமிழ்நாட்டின் மிஸ் பண்ணக்கூடாத சுற்றுலா பகுதிகள்!

Ooty Train
உலகம் முழுவதுமுள்ள மக்கள் பல்வேறு நாடுகளுக்கும், பகுதிகளுக்கும் சுற்றுலா செல்வதை ஊக்கப்படுத்தும் விதமாக இன்று தேசிய சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.

மக்கள் தங்கள் பிரச்சினைகள், மன உளைச்சலை மறக்க பெரும் உதவியாக இருப்பது சுற்றுலாக்கள். மேலும் சுற்றுலா இயற்கை குறித்த அறிவை, விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. சுற்றுலாத்துறையின் அவசியம், சுற்றுலா செல்வதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 25 தேசிய சுற்றுலா தினமாக கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் சுற்றி பார்க்க வேண்டிய அற்புதமான சுற்றுலா தளங்கள் சில

சென்னை

Ooty Train

சென்னை தமிழ் நாட்டின் தலைநகர். இங்கு பல தரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு தான் உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய கடற்கரை (மெரினா) உள்ளது.சென்னையில் பார்க்க ஆசியாவிலேயே மிகப் பெரிய முதலைப் பூங்காவும், விலங்கியல் பூங்காவும் இருக்கிறது. 

பிரிட்டிஷ்காரர்களால் 300 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சிபுரியப்பட்ட சென்னை இன்னும் பிரிட்டிஷ் கட்டிடகலையின் சான்றுகளை தன்னுள் கொண்டு விளங்குகிறது. அர்மீனியர்கள் அபூர்வமான கோட்டை கூட சென்னையில்தான் உள்ளது.

கன்னியாக்குமரி
Ooty Train

கன்னியாகுமரியில் மிகப் பிரபலமான இடங்கள் என்றால் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தரின்  கற் நினைவுச்சின்னம், சங்குத்துறை பீச். இந்த குமாரியில் உள்ள கோட்டையில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில் கூட இங்கு பிரசித்தமான ஒன்று.

வங்காள விரிகுடா, இந்திய பெருங்கட, அரபிக்கடல் என முக்கடலும் சங்கமிக்கும் அழகை காண பல பயணிகள் இங்கு குவிகின்றனர். இங்கு நிறைய சங்கு பொருட்கள் கிடைக்கும். இந்த நகரம் கலாச்சாரத்திற்கு பிரசித்தமான ஒன்று.  

மதுரை
Ooty Train

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் மிகவும் பிரசித்தம் . காந்தி மியூசியம், நாயக்கர் மஹால் போன்ற வரலாற்று பகுதிகளும், அழகர் கோவில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட ஆன்மீக ஸ்தலங்களும் அருகருகே அமையப்பெற்ற ஊர் மதுரை.

அதே போல் மதுரை ஜிகிர்தண்டா வேறு எந்த ஊரில் செய்தாலும் இங்கு கிடைப்பது போல் சுவையாக கிடைக்காது. மதுரை மல்லிகைப் பூ மற்றும் இட்லியும் மிக மிக பிரபலமான ஒன்று.

முதுமலை
Ooty Train

இது நீலகிரி மலைத்தொடரில் உள்ளது. இங்கு பூங்காவனம் மிக அழகாக இருக்கும் ஏன் என்று கேட்டால், அழகான வண்ண மயில்களும், பிற விலங்குகளும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இங்கு மயில்கள் மட்டும் அல்ல புலி, சிறுத்தை,குள்ளநரி, போன்ற எண்ணற்ற விலங்குகளை பார்க்கலாம்.

முதுமலை புலிகள் சரணாலயத்தில் பார்ப்பதற்கு ரம்மியமான பல பகுதிகளும், அபூர்வமான விலங்குகளும் உள்ளன. இங்குள்ள டாப் ஸ்லிப் பகுதி சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்குரிய ஒன்று.

ஊட்டி

உதகமண்டலம் என்னும் ஊட்டி குளிர்வாசஸ்தலமாகும். மலைகளின் அழகையும், குளிரின் இனிமையையும் இங்கு அனுபவிக்கலாம். ஊட்டியில் உள்ள பொட்டானிக்கல் கார்டன், குன்னூர் சிம்ஸ் பார்க், டால்பின் நோஸ், தொட்டபெட்டா, பைக்காரா ஏரி உள்ளிட்டவை முக்கியமான சுற்றுலா பகுதிகளாகும்.

Edit by Prasanth.K