இந்தியில் மருத்துவப் படிப்பு திட்டம் இன்று தொடக்கம்!
இந்தியாவில் முதல் முறையாக இந்தியில் மருத்துவ கல்வி இன்று முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த பல ஆண்டுகளாக மருத்துவக்கல்வி ஆங்கிலத்தில் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தாய்மொழியில் மருத்துவ கல்வி படிக்க வேண்டும் என மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக திட்டமிட்டு வந்த நிலையில் தற்போது முதல் முறையாக இந்தியில் மருத்துவக் கல்லூரி இன்று முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தியில் மருத்துவ கல்வி படிப்பை இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்க உள்ளார்/ 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உடற்கூறியல், உடலியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய மூன்று பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதேபோல் மற்ற மாநிலத்திலும் தாய்மொழியில் மருத்துவ படிப்பு பயிற்றுவிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Edited by Siva