வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (08:36 IST)

இன்று முதல் மதுரை – செங்கோட்டை சிறப்பு ரயில் ரத்து! – தெற்கு ரயில்வே!

Train
ரயில் பாதை பணிகள் நடந்து வருவதால் இன்று முதல் மதுரை – செங்கோட்டை சிறப்பு ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை அருகே ராஜபாளையம் – சங்கரன்கோவில் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் இன்று தொடங்கி நடைபெற உள்ளது. இதனால் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 11.30க்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இன்று முதல் செப்டம்பர் 10ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விழாக்காலம் என்பதால் அறிவிக்க சிறப்பு ரயில்களில் மைசூரு – திருவனந்தபுரம் சிறப்பு ரயில் செப்டம்பர் 7ம் தேதி மதியம் 12.05 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை7.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். செப்டம்பர் 8ம் தேதி மதியம் 12.45 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 11.45 மணிக்கு மைசூரு சென்றடையும்.