வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : சனி, 21 மார்ச் 2020 (22:17 IST)

வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு இலவச பிராண்ட் பேண்ட் சேவை - BSNL அறிவிப்பு

வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு இலவச பிராண்ட் பேண்ட் சேவை - BSNL அறிவிப்பு

கொரோனா வைரஸ் உலக முழுவதும் அதிகப்படியான உயிர் பலிகளை கொடுத்து வருகிறது. இதுவரை 170 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,000-த்தை கடந்து உள்ளது. சீனாவில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இத்தாலி மற்றும் ஈரான் போன்ற நாடுகள் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10 நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழப்பதாகவும், ஒரு மணி நேரத்திற்கு 50 பேர் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்ணிக்கை
259 லிருந்து,298ஆக உயர்வு இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 4 பேர் உயிரிழப்பு என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரளால் பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் எதிரொலியால், வீட்டில் இருந்தே பணி செய்ய பணியாளர்களை நிறுவனங்கள்  கேட்டுக்கொண்டதால், பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஒரு மாதம் பிராண்ட் பேண்ட் சேவையை இலவசமாக வழங்கும் என அறிவித்துள்ளது.

வீட்டில் இருந்து பணி செய்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக மார்ச் 21 இன்று முதல் ஒரு மாதத்திற்கு பிராண்ட் பேண்ட் சேவையை இலவசமாக கொடுப்பதாக பி.எஸ்.என்.எல் நிறுவனம்  அறிவித்துள்ளது.