ஐஃபோனுக்கு போட்டியாக களமிறங்கும் ஆண்ட்ராய்ட் 11!
மொபைல் இயங்கு தளங்களில் பிரபலமான ஆண்ட்ராய்ட் தனது புதிய அப்டேட்டை விரைவில் வெளியிட இருக்கிறது.
உலகளவில் மக்கள் உபயோகிக்கும் மொபைல்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் இயங்குதளம் ஆண்ட்ராய்ட். உபயோகிக்க எளிதாக இருப்பதாலும், விலை குறைவாக கிடைப்பதாலும் பலர் ஆண்ட்ராய்ட் மொபைல்களை விரும்பி வாங்குகின்றனர். இருப்பினும் ஆப்பிள் போன்ற இயங்குதளங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் இல்லை என்பது குறையாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் 11வது வெர்சனானது ஆப்பிளுக்கு நிகரான சிறப்பம்சங்களுடன் வெளியாக உள்ளது. ஆண்ட்ராய்ட் 11-ன் பெயர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையிலும் அதன்மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
தற்போது கூகிள் நிறுவனத்தின் பிக்ஸல் போன்களில் மட்டுமே பயன்படும் இந்த ஆண்ட்ராய்டு 11 ஜூன் 2ம் தேதிக்கு பிறகு வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்குய் ஏற்ப 5ஜி அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி இதில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஐபோனில் இருப்பது போன்ற மேம்படுத்தப்பட்ட தகவல் திருட்டு தடுப்பு, ஒருமுறை மட்டுமே இருப்பிடத்தை அறிய செய்யும் வசதி உள்ளிட்ட சேவைகளும் இதில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தற்போதைய மொபைல்களில் உள்ள ஸ்க்ரீன் அன்லாக், ஸ்க்ரீன் ரெக்கார்ட் வசதிகளும் இதில் இடம்பெற உள்ளது.