வியாழன், 6 அக்டோபர் 2022
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified வியாழன், 22 செப்டம்பர் 2022 (14:40 IST)

ஃபிராங் வீடியோ செய்த நபருக்கு விழுந்த பளார்!

சமூக வலைதளங்கள் மலிந்துள்ள இன்றைய காலத்தில் பொழுதுபோக்கு அம்சம் என்ற பெயரில், பிரபல யூடியூபர்கள் மற்றும்  சில இளைஞர்கள்   பிராங்க் வீடியோ எடுத்து வருகின்றனர்.

இதில்,. சம்பந்தப்பட்டவர்களில் ஆண்கள், பெண்கள் என யாராயிருந்தாலும், அவர்கள் எந்தச் சூழ் நிலையில் உள்ளனர். என்ன மனோ நிலையில் உள்ளனர்? என்பதெல்லாம் தெரியாமல் சிலர் பிராங்க் என்ற பெயரில் நகைச்சுவையாக சித்தரித்து வீடியோ வெளியிடுகின்றனர்.

இதன் விபரீதத்தை அறிந்துதான், சமீபத்தில், கோவை மாவட்டத்தில் பிராங் வீடியோ எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், பல இடங்களில் இது எல்லை மீறிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் வட மாநிலத்தில்,  ஒரு நபர் சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும்போது, யூடியூபர் ஹாரன் பிராங்க் செய்யவே, கொதிப்படைந்த அந்த நபர், எதோ கேட்டுவிட்டு, அவ்ர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிட்டார். யூடியூபர் அதிர்ச்சி அடைந்துள்ளார். பிராங்கைவிட இந்த வீடியோ வைரலாகி வருகிற்து.