தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்கால தடை: ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
தமிழகத்தின் தட்டச்சு தேர்வு நடத்துவதற்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் தட்டச்சு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்திவரும் இந்த தட்டச்சு தேர்வு முறை 70 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் நிலையில் இதிலுள்ள தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்ப்ட்டது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஏற்கனவே நடைமுறையில் இருந்த முறைப்படியே தட்டச்சு தேர்வு நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டார்
இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து நிலையில் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள் இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்கால தடை விதித்துள்ளது.