திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 நவம்பர் 2023 (17:22 IST)

சக மாணவர்களை காம்பஸ் கொண்டு 108 முறை குத்திய 4ஆம் வகுப்பு மாணவன்.. அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவன் மூன்று சக மாணவர்களை காம்பஸ் கொண்டு சரமாரியாக 108 முறை குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் என்ற பகுதியில் தனியார் பள்ளியில் நான்காம் படிக்கும் மாணவர் ஒருவர் திடீரென மூன்று சக மாணவர்களுடன் சண்டை போட்டதாக தெரிகிறது.

இந்த சண்டையின் போது ஆத்திரத்தில் சக மாணவர்கள் மூவரை காம்பஸ் கொண்டு 108 முறை மாணவன் சரமாரியாக குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு குழுமம் விசாரணை நடத்தி வருவதாகவும்  சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தேவையான கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மாணவனின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு அந்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து அறிவுரை கூறப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

Edited by Mahendran